எ-து பொருள் வயிற்பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன்
குறித்த வரவுகண்டு கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச்
சொல்லியது.
(ப-ரை) ‘அழுங்குக செய்பொருட்செலவு? என்றது மேலுள
தாகும் பொருட்பிணிச் செலவும் இனிக் கெடுவதாக எ-று.
குறிப்பு. குரவமும் மரவமும்; ஐங். 344, 348, காணூஉ-கண்டு.
அழுங்குக-கெடுக; (தொல். உரி. 52.) செலவு - இனிச் செல்லுதல்
செலவு அழுங்குக. அம் கலிழ் மாமை-அழகு ஒழுகுகின்ற. மாமை
நிறம். கவின - ஒளிபெற காதலோர் வந்தனர். ( 7 )