461

5. முல்லை

(47) தோழி வற்புறுத்த பத்து


461.வான்பிசிர்க் கருவியிற் பிடவுமுகை தகையக்
   கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே
   இணையல் வாழி தோழி யெனையதூஉம்
   நிற்றுறந் தமைகுவ ரல்லர்
   வெற்றி வேந்தன் பாசறை யோரே.

     எ-து பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி,
‘உரைத்த பருவம் வந்ததாகலான் அவர் வருவர்? என
வற்புறீஇயது.

    (ப-ரை.) ‘கான்பிசிர்கற்ப? என்றது ‘மழை பெய்திட்டால் மரம்
பெய்யும்? என்னும் முறைமை பற்றிக் கூறியவாறு.

    குறிப்பு. வான் பிசிர்க்கருவியின்-மேகம் சிதறின நீர்த் தொகுதி
யாலே. பிடவுமுகை-பிடாமலரின் மொட்டுக்கள். தகைய-அழகுற்
றுத் தோன்ற; ?மராஅம் தகைந்தன? (கார். 19). கான்-காடு. பிசிர்
கற்ப-துவலையாகத் தூவ; ?வெண்மழை....... துவலை கற்ப? (நெடு
நல். 19-20). இணையல்-வருந்தாதே. எனையதூஉம்-சிறிதும். பாசறை
யோர் என்றது தலைவனை. பாசறையோர் நின்னைத்துறந்து அமை
குவரல்லர்.( 1 )