எ-து தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக்கேட்ட காதற்
பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகனோடு புலந்து
சொல்லியது.
(ப-ரை.) கரும்பு குணிலா மாங்கனியுதிர்க்கு மூர என்றது யாங்
கள் பழித்தேமென்று அவட்கு இனியசொற்கூறி அவள் எங்களைப்
பழித்துக்கூறும் சொற்களை நினக்கு இனியவாகப் பெறுவாய் எ-று
குறிப்பு. பகன்றைக் கண்ணி-சிவதைப் பூவாலாகிய மாலை; ஐங்.
97 : 1 ; குறிஞ்சி. 88. பல்லான் கோவலர்-மிக்க பசுக்களையுடை
இடையர். பகன்றைமலரைச் சூடுதல் : மலைபடு.459; பதிற்.76 : 12-3.
குணில்-குறுந்தடி. புலக்கும்-பிணங்குவாள். ( 7 )