88

(9) புலவி விராய பத்து

 


88. வண்டுறை நயவரும் 1வளமலர்ப் பொய்கை
தண்டுறை யூரனை யெவ்வை யெம்வயின்
வருதல் வேண்டுது மென்ப
தொல்லேம் போல்யா மதுவேண் டுதுமே.

 எ-து தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பில்லா
தாள் போல அவ்வாறு கோடலையே விரும்புவாள், அது தனக்கு
முடியாதெனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை
அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது.

 (ப-ரை.) இவ்வாறு என்னைக் கூறுகை தவிராளாயின் அதனை
முடியச் செய்து விடுகின்றேனென்பதாம். வள்ளிய துறைகளின்
கண்ணே எல்லாரும் கொள்ளும் வண்ணம் நயந்து பூக்கின்ற மலர்
களையுடைய பொய்கை யூரன் என்றது மகளிரெல்லார்க்கும் பொதுப்
பட்டிருப்பான் எ-று.

 குறிப்பு. வண்துறை - வளம் பொருந்திய துறை. நயவரும் -
எல்லோரும் விரும்புகின்ற. எவ்வை - எம்தங்கை; பு. வெ. 315;
என்றது தலைவியை. ஒல்லேம் போல் - பொருந்தோமென்பது
போலவே. வேண்டுதும் - விரும்புகின்றோம்.

  (பி-ம்.) 1 ‘வளர்மலர்’ ( 8 )