எ-து பருவங்குறித்துப் பிரிந்த தலைமகன்வரவு பார்த்திருந்த
தலைமகள் பருவமுதிர்ச்சி கூறி ஆற்றாளாய் உரைத்தது.
(ப.-ரை) சிதர் -சிந்துதல்.
குறிப்பு. துணர்க்காய் -கொத்தான காய். குழற்பழம் - குழல்
போன்ற பழம்; திணைமா. 98. ஊழ்த்தன - முதிர்ந்தன. பெயற்கு -
மழையை. எதிரிய - ஏற்று. சிதர் - சிந்துதல்; வண்டுமாம். பாணர்
பெருமகன் - தலைவன்: “பாணரொக்கல்” (திருச்சிற். 400). மலர்
என்கண் போன்றன. கொன்றைப்பூ, நீர்நிறைந்து பசலைபெற்ற
கண்ணுக்கு உவமையாயிற்று. பசலைக்குக் கொன்றைமலர்; ஐங்.
500 : 1; குறுந். 183 : 1-2; அகநா. 398 :3-5. ( 8 )