72
(8) புனலாட்டுப் பத்து

 


72. வயன்மல 1ராம்பற் கயிலமை நுடங்குதழைத்
  திதலை யல்குற் றுயல்வருங் கூந்தற்
  குவளை யுண்க ணேஎர் மெல்லியல்
  மலரார் மலிர்நிறை வந்தெனப்
  புனலொடு புணர்துணை யாயின ளெமக்கே.

 எ-து தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப்புனல் ஆட
வேண்டிய தலைமகன் களவுக்காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை
அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. வயலில் மலர்ந்த ஆம்பல். கயில்-மூட்டுவாய். ஆம்பல்
தழையை உடுத்தல் : “வெள்ளாம்பல்..........அலைப்ப” (குறுந். 293. 5 :
6) ; “அளிய தாமே சிறுவெள் ளாம்பல். இளைய மாகத் தழையா
யினவே” (புறநா. 248 : 1-2); “ஆம்ப லணித்தழை” (திணை. ஐம். 40),
திதலை யல்குல்; ஐங். 29, குறிப்பு. துயல்வரும்-அசைகின்ற. ஏர்-
அழகிய. மெல்லியல் என்றது தலைவியை. மலிர் நிறை-வெள்ளம்.
வந்தென-வந்ததாக. புணர்துணை-கூடிய துணை ; ஐங். 15 : 2. எமக்கு
மெல்லியல் துணையாயினள்.

  களவுக்காலத்துப் புனலாடுதல் : குறுந். 353 : 1-3. ஒப்பு.

(பி-ம்.) 1 ‘ராம்பற் கயலமை’   ( 2 )