எ-து குறித்த பருவத்து எய்திய அணித்தாக வந்த தலைமகன்
பருவத்தால் அணிகொண்ட புறவைநோக்கிச் சொல்லியது.
குறிப்பு. தேம்-இனிமை, புறவே : விளி. புறவே, கொன்றை
யொடும், காயாவொடும், தோன்றியொடும் நலம் எய்தினை; கொன்
றைப் பூவிற்குப் பொன்னும், காயாமலருக்கு நீலமணியும் உவமை
கள். கொன்றைப் பூவிற்குப் பொன் : குறுந். 21 : 1-3 காணிய-
காண வேண்டி. யாம் நின்னைக் காணிய அரிவையொடு நலம்
படர்ந்து வருதும். ( 10 )
(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து முற்றிற்று.