343

4 பாலை

(35) இளவேனிற் பத்து


343. அவரோ வாரார் தான்வந் தன்றே
    திணி நிலைக் கோங்கம் பயந்த
    அணிமிகு கொழுமுகை யுடையும் பொழுதே.

   குறிப்பு. கோங்கம்-கோங்குமரம் பயந்த - அளித்த. அணி-அழகு. முகை உடையும்பொழுது- மொட்டு மலரும் காலம். கோங்கு
இளவேனிற்கு உரியது; “வேனிற் கோங்கு” (புறநா. 321 : 4) ( 3 )