எ-து தலைமகளை நோக்கி, ‘இவ்வேறுபாடு எற்றினான்
ஆயிற்று?? என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு
நின்றது.
(ப-ரை) . இது முன்னாள் அவன் தந்த கோங்கம்பூவால்
விளைந்ததெனப் பூத்தருபுணர்ச்சி கூறியவாறாயிற்று. இது
கருப்பொருளாற் பாலை.
குறிப்பு. கண்ணை - கண்ணையுடையையாய். கொன்னே கடவுதி
யாயின்-பயனற்று வினவுவாயாயின். என்னதூஉம்-சிறிதும். அறிய
ஆகுமோ-அறிய இயலுமோ. முறி இணர்க்கோங்கம் - தளிரையும்
பூங்கொத்தையுமுடைய கோங்கமரம். கோங்கம் பயந்ததை அறிய
வாகுமோ.
கருப்பொருளாற் பாலை : ஐங் 370, உரை.
(மேற்.) மு. இஃது இவ்வேறுபாடு என் என்ற செவிலிக்குத்
தோழி பூத்தருபுணர்ச்சியால் அறத்தொடு நின்றது: இது பாலையிற்
குறிஞ்சி; இஃது உரிப்பொருளொடு உரிப்பொருள் மயங்கிற்று
(தொல். அகத். 12, ந.); இ-வி, 394. (பி-ம்) 1‘அரிய? 2‘மார்பே? ( 6 )