எ-து களவு நீடுவழி வரையலன்கொலென்று அஞ்சிய தோழிக்
குத் தலைமகன் வரையுந்திறம் தெளிக்கத் தெளிந்த தலைமகள்
சொல்லியது.
குறிப்பு. செருந்தி : ஒருவகை மரம்; இது நெய்தல் நிலத்திற்
குரியது; சிறுபாண். 147 : பாசிலைச் செருந்தி : அகநா. 150 : 9,
280 : 1. தாய = தாவிய-பரந்த. சேர்ப்பன் : நெய்தல் நிலத்தலைவன்.
வர-நம்மை வரைய வர. நாமே மறந்தோம், என்றது நாம் மறந்
தோம் அவன் மறவானென்றபடி மன்ற : தெளிவுப் பொருளை
உணர்த்துவதோர் இடைச்சொல் (தொல், இடை. 17, ந,); ஐங். 116 :
3 ; 119 : 3.
(பி-ம்.) 1 ‘மறந்தோன் மன்ற’ ( 2 )