400

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


400. மள்ள ரன்ன மரவந் தழீஇ
   மகளி ரன்ன வாடுகொடி நுடங்கும்
   அரும்பதங் கொண்ட பெரும்பத வேனிற்
   காதல் புணர்ந்தன ளாகி யாய்கழல்
   வெஞ்சின விறல்வேற் காளையொ
   டின்றுபுகு தருமென வந்தன்று தூதே.

    எ-து உடன்போய் வதுவையயரப்பட்ட தலைவி. ‘தலைவனோடு
இன்று வரும்? எனக்கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச்
சொல்லியது.

   குறிப்பு. மள்ளரன்ன - வீரரைப்போன்ற. மரவம்-ஒரு வகை
மரம். மகளிரன்ன- மகளிரைப் போன்ற ; மள்ளரும் மகளிரும் ; ஐங்.
94 : 1-2. அரும்பதம்-அரிய செவ்வி. பெரும் பதம்-பெரிய
செவ்வியையுடைய. காதல்-கலியாணம், விறல்-வெற்றி, புகுதரும்-
வருவாள். தூது வந்தன்று ; வந்தன்று-வந்தது.

    (மேற்.) மு. வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல் (நம்பி.
வரைவு. 24) ( 10 )

(40) மறுதரவுப் பத்து முற்றிற்று.