103

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


103. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
   ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவன்
   இவட்கமைந் தனனாற் றானே
   தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே.

   எ-து அறத்தொடு நின்றதோழி வதுவை நிகழாநின்றுழித்
தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது.
   (ப-ரை.) புன்னையொடு ஞாழல் பூக்குமென்றது குடிப்பிறப்பும்
உருவும் நலனும் ஒத்தல் கூறியவாறு.
   குறிப்பு. ஞாழல்-புலிநகக் கொன்றை, புன்னையும் ஞாழலும் :
ஐங். 169 : 2-3; குறுந். 38 : 12. இவட்கு-தலைவிக்கு. அமைந்தனன்-
உரு, நலன் முதலியவற்றால் ஒத்தனன்; ஆல், தான், ஏ : அசைகள்-
அமைந்தன்று-ஒத்தது. இவள் மாமைக் கவின்-இவளது மாமை
யாகிய பேரழகு; குறுந். 27 : 5; கலித். 4 : 17-8. கவின் அமைந்
தன்று.

   (மேற்.) மு. ‘வதுவை நிகழாநின்றுழித் தாய்குத் தோழி கூறி
யது? (தொல். களவு. 24, ந.).             ( 3 )