117


(12) தோழிக்குரைத்த பத்து


117. அம்ம வாழி தோழி நலனே
   இன்ன தாகுதல் கொடிதே புன்னை
   அணிமலர் துறைதொறும் வரிக்கும்
   மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தீமே.

 எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. நலன்-அழகு. இன்னதாகுதல்-பிறர் அலர் தூற்றும்
குறைபாட்டை யுடைய இத்தகையாதல்; பசலையாயிற்று என்றபடி;

  குறுந். 109 : 4, வரிக்கும்-ஒழுங்குபட உதிர்க்கும். மறவாதீமே-
மறவாதே; மே : அசைநிலை.

   (மேற்.) மு. காமமிக்கவழித் தலைவி கூறல் (தொல். களவு. 21.
இளம்.)      ( 7 )