92

(10) எருமைப்பத்து

 


92. 1கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக்
 காதற் குழவிக் ஊறுமுலை மடுக்கும்
 நுந்தை நும்மூர் வருதும்
 ஒண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே

 எ-து நினக்கு வரைந்துதருதற்குக் குறை நின் தமர் அங்குவந்து
கூறாமையே யெனெத் தோழி கூறினாளாக, தலைமகள் முகநோக்கி
இவள் குறிப்பினாற் கூறினாளென்பது 2அறிந்த தலைமகன், ‘வரைவு
மாட்சிமைப்படின் நானே வருவல்’ எனத்தலைமகட்குச் சொல்லியது.

 (ப-ரை.) எருமைப் புனிற்றாத் தன் குழவிக்கு ஊறு முலை மடுக்கு
மென்றது அவள் பொருட்டு உற்றார்பக்கல் தான் பெறுவனவும் கூறி
யவாறு.

 குறிப்பு. எருமைப்புனிற்றா-ஈன்ற அணிமையையுடைய எருமை.
காதற் குழவிக்கு - அன்பு சிறந்த தன் கன்றுக்கு. எருமைக்குழவி : பட்.
14; நற். 120 : 1; குறுந். 181 : 3-4. உறுமுலை மடுக்கும் - பால் ஊறு
கின்றமுலையை உண்பிக்கும். நுந்தை நும்மூர்-உன் தந்தையுடைய
வாகிய உங்கள் ஊரிடத்து; புறநா. 78 : 11, உரை. யாம் நின்னைப்
பெறின் வருதும்.

  (மேற்.) மு. “கிழவோன் சொல்லும் உள்ளுறை யுவமம் தன்னு
டைமை தோன்றச் சொல்லப்படும் : ‘கருங்கோட்டு........... பெறினே’
என்றவழி, தாய்போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன்
தலைமைதோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க” (தொல். உவம.
27, பேர்.). திணைமயக்குறுதலுள் இது மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்
தது (தொல். அகத். 12. ந.). திணை மயக்குறுதலுள் குறிஞ்சிக்குரிய
புணர்தல் மருதத்திணையொடு மயங்கிவந்தது (இ. வி. 394).

  (பி-ம்.) 1 ‘அருங்கோட்டெருமை’ 2 ‘அறிந்து தலைமகன்’   ( 2 )