97

(10) எருமைப்பத்து

 


97. பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
 கருந்தா ளெருமைக் கன்று வெரூஉம்
 பொய்கை யூரன் மகளிவள்
 பொய்கைப் பூவினு நறுந்தண் ணியளே.

  எ-து புறத்தொழுக்கம் 1இன்றியே இருக்கவும் உளதென்று
புலந்த தலைமகளைப் புலவிநீக்கிய தலைமகன் புணர்ச்சியது இறுதிக்
கண் தன்னுள்ளே சொல்லியது.

 (ப-ரை.) தாயினுடைய பகன்றைமலர் மிடைந்த கோட்டைக்
கன்று வெரூஉமென்றது தன் தோளிலணிந்த மாலையைப் பிறிதொன்
றற்கு அணிந்த மாலையெனக் கருதினாளென்பதாம்.

 குறிப்பு. பகன்றை வான்மலர்-பகன்றையாகிய வெள்ளிய
மலரை; பகன்றை வெண்ணிறமானது : ஐங். 456 : 2; அகநா. 217 :
6-8; கலித். 73 : 2-5. கோட்டை-கொம்பை. வெரூஉம்-அஞ்சும்.
நறுந்தண்ணியள்-மிக்க குளிர்ச்சியையுடையவள்; குறுந். 70 : 2,
84 : 5, 168 : 4. ‘பொய்கை........தண்ணியள்’ என்றது பொய்கையில்
நீர் இல்வழி ஆங்குள்ள பூ சில நாளில் வாடும் ; தலைவி அவ்விதமின்
றித் தலைவனைக் காணாக்காலே வாடும் தன்மையினள் என்பதாம்.

 (பி-ம்.) 1 ‘இன்றியிருக்கவும்’ ( 7 )