11

( 2 ) வேழப்பத்து


11. மனை1நடு வயலை வேழஞ் சுற்றும்
  துறைகே ழூரன் கொடுமை நாணி
  நல்ல னென்றும் யாமே
  அல்ல னென்னுமென் றடமென் றோளே.

 எ-து பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி
வாயில் மறுத்த தலைமகள் கழறிய பாங்கற்கு வாயில்நேர்வாள்
சொல்லியது; ‘தலைவன் எவ்வாறு தப்பியொழுகினும் அவன்
கொடுமை நின்னாற்2புலப்படுதல் தகாது? என்று கழறிய பாங்கிக்குத்
தலைமகள் சொல்லியதுாஉமாம்.

  (ப-ரை.) மனைக்கண் வயலை புறத்து வேழம் சுற்றுமூரனென்றது
மணமனைக்கண்ணே வைகுஞான்றும் பரத்தையர் திறமே சூழ்வா
னென்பதாம்.

 குறிப்பு. நடுவயலை-நட்டு வளர்க்கப்பட்ட பசலைக்கொடி;
எழுவாய். வேழம்-கொறுக்கைச்சி; கொறுக்காந்தட்டையெனவும்
வழங்கும் சுற்றும்-கொழு கொம்பாகச் சுற்றிப்படரும். துறைகேழூரன்
கொடுமை : ஐங், 12 : 2. கொடுமை என்றது பரத்தைமையை.
என்றும்-என்று சொல்லுவோம். அல்லன்-நல்லவன் அல்லன்.
உண்டி குறைதலால் உடம்பு நனி சுருங்கித் தொடி நெகிழ்தலின்,
‘தோள் அல்லன் என்னும்? என்றாள். தலைவி தன்னையும் தோளையும்
வேறுபடுத்திக் கூறல்: குறுந். 77 : 6; 121 : 5-6.

 கழறிய - இடித்துக் கூறிய. புலப்படுதல்-பிறர் அறிதல்.

 (மேற்,) அடி, 2. கெழு என்னும் சாரியை உகரக் கேடும் எகர
நீட்சியும் பெற்றது (தொல்.குற்றியலுகரப். 76, ந) மு. கற்பின்கண்
தலைவனை நீங்கி மிகத் தனிமையுற்று அலமரல் பெருகிய காம
மிகுதியின்கண் தலைவிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு. 6, இளம்.).
‘இதனுள் முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றும் கூறலின் நாடக
வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாதலின்
உலகியல் வழக்உடன் கூறிற்று? (தொல். அகத் 53, ந.)
இ. வி. 378

 (பி-ம்.) 1‘நெடு வயலை? 2‘புலப்படுத்தற்காகாது?               ( 1 )