53

(6) தோழிக்கூற்றுப் பத்து


53. துறையெவ னணங்கும் யாமுற்ற நோயே
   சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
   கழனித் தாமரை 1மலரும்
   பழன வூரநீ யுற்ற சூளே.

  எ-து தலைவி தன்னுடன் போய்ப் புனலாடியவழி, ‘இது பரத்
தையருடனாடிய துறை’ என நினைந்து பிறந்த மெலிவை மறை
த்தமையை யுணர்ந்த தலைமகன் மனைவயிற் புகுந்துழி,‘தெய்வங்கள்
உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனாற் பிறந்ததுகொல்
நினக்கு இவ்வேறுபாடு’ என்று வினாயினாற்கு அவள் சொல்லியது.

   குறிப்பு. துறை-துறைத் தெய்வம், எவன் அணங்கும்-யாது
வருத்தும்? சிறை-அணை. சிறையழி புதுப்புனல்: ஐங். 78 : 3. பாய்ந்
தென-பாய்ந்ததாக, யாமுற்ற நோய்க்குக் காரணம் நீயுற்றசூளே.
தலைவன் துறையில் உற்றசூள் : குறுந். 53 : 5-7.

      (பி-ம்.) 1 ‘மல்கும்’       ( 3 )