(13) கிழவற்குரைத்த பத்து
127. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே தும்பை மாலை யிளமுலை நுண்பூ ணாகம் விலங்கு வோளே.
குறிப்பு. தும்பை மாலை : இதை இளமகளிரே யணிவர், ஆகம்-மார்பு. விலங்குவோள்-குறுக்கிட்டு கிடப்போள், தும்பை மாலையாலும் நுண் பூணாலும் விலங்குவோள். ( 7 )