436

5. முல்லை

(44) புறவணிப் பத்து


436. நன்றே காதலர் சென்ற வாறே
    நன்பொ னன்ன சுடரிணர்க்
    கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே.

    குறிப்பு. இணர்-பூங்கொத்து. குருந்தும்; மார்; அசைச்சொல்.
கொன்றையொடு குருந்தும் உடைத்து. ( 6 )