எ-து பிரிவுநீட ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி
‘இன்றே வருவர்? என வற்புறீஇயது.
குறிப்பு. நுணல் : மணலுக்குள் முழுகி மறைந்து கிடக்கும் ஒரு
வகைப் பிராணி ; நற். 59 : 1; ?மணலுண் முழுகி மறைந்து கிடக்கும்,
நுணலுந்தன் வாயாற் கெடும்? (பழமொழி. 184) கறங்க-ஒலிக்க;
நுணல் கறங்கல் : அகநா. 364 : 3. தெவிட்ட-ஒலிக்க. ஐங். 453 :
1, குறிப்பு. நுணல் வேறு தேரை வேறு. பணைத்தோட்கு விருந்தாகக்
காதலோர் வருவர்.