எ-து வரையத்துணிந்த தலைமகன் வரைவுமுடித்தற்குத் தலை
மகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக்கண்டு இனி அது
முடியுமென உவந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது.
குறிப்பு. மன்ற வேங்கை-மன்றத்தின்கண் உள்ள வேங்கை
மரத்தினது; குறுந் 241 : 4; அகநா. 232 : 7. வழுத்தி-துதித்து.
தேம்பலி-இனிமையான தேவருணவு, தலைவி மேனி காந்தள் நாறு
தல் : ஐங். 24 : 2-3 ; ?வேங்கையுங் காந்தளும் நாறி...... தண்ணி
யளே? (குறுந். 84 : 4-5). கலிழ்ந்த-கலங்கிய. அணங்கியோள்-
வருந்தினவள். எம் அணங்கியோள் : குறுந்.119 : 4.
(மேற்). மு. தலைமகள் அணங்கைப் பாராநிலைகண்ட தலைமகன்
மகிழ்தல் (நம்பி. வரைவு, 4) ( 9 )