276

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


276. மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
    தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
    பொங்க லிளமழை புடைக்கு நாட
    நயவா யாயினும் வரைந்தனை சென்மோ
    கன்முகை வேங்கை மலரும்
    நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.

   எ-து வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச்
சொல்லியது.

  (ப-ரை.) மேல் கருக்கொண்டு முற்றிப் பயன்படுவதாய இள
முகிலை மந்தி நறைக்கொடி கொண்டு புடைக்கும் நாடவென்றது
வரைந்து மகப்பெறுதற்கு உரியளாகிய இவளை இம்மறைந்த
வொழுக்கத்தாலே கொலைசூழ்கின் றாயென்பதாம்.
‘கல்முகை வேங்கைமலரும் நாட’ என்றதனால் வரைதற்குரிய
பருவமும் கூறியவாறாயிற்று.

  குறிப்பு. முறி-தளிரை, காதலனாகிய கடுவன். முறிமேய்
கடுவன் : மலைபடு. 311-3; குறுந். 288 : 1-2. நறைக்கொடி-ஒருவகைக்
கொடி ; மலைபடு. 514, ந,; நற். 5 : 3; அகநா. 282 : 9; புறநா. 168 :
15. பொங்கல்-பொங்குதலையுடைய. இளமழை-இளைய மேகத்தை.
கலித். 41 : 25. நயவாயாயினும்-விரும்பாவிடினும், கன்முகை
வேங்கை-பாறைகளின் வெடிப்புக்களில் தோன்றியுள்ள வேங்கை
மரம், நாட, வேங்கை மலரும்; பெண்டெனப் படுத்து வரைந்தனை
சென்மோ. ( 6 )