எ-து வாயில் பெற்றுப் புகுந்துபோய்ப் புறத்தொழுக்கம் ஒழுகிப்
பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது.
குறிப்பு. நீரில் உறைகின்ற நீலச் சேவற்கோழியை. கூருகிர்ப்
பேடை - கூரிய நகங்களையுடைய பெட்டை, வயாஅம் - விரும்பும் ;
வயா என்பதன் அடியாகப் பிறந்த வினை ; மலைபடு. 476. வயாஅ
நோய் - கருப்பம் தாங்கிய பின் வருத்தமுற்று நுகரப்படும் பொருள்
கள் மேற்செல்லும் வேட்கை ; கல். 8, மயிலேறு, அன்று மலர்ந்த
நின் மார்பு இவள் வயா நோய்க்குப் புளிங்காய் வேட்கைத்து.
புளிங்காய் வேட்கை வயாக்குறிப்பு; குறுந். 287 : 4-5 ; பிரபு. மாயை,
27 ; ?தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை, உண்
கயத் துள்ளும் வயலூர.......வண்கயம்,போலுநின் மார்பு புளிவேட்
கைத் தொன்றிவண்,மாலுமா றாநோய் மருந்து? (திணைமாலை. 142)
(மேற்.) அடி, 3, புளிங்காய் என அம்முச்சாரியை பெறாது மெல்
லெழுத்துப் பெற்று முடிந்தது (தொல். உயிர்மயங்கு.44, ந.). இச்
செய்யுளைப் பயவுவமப் போலிக்கு உதாரணமாகக் காட்டியதன்றி,
?நீருறை கோழி நீலச்சேவலை அதன் கூருகிர்ப் பேடை நினைந்து
கடுஞ்சூலான் வந்த வயாத்தீர்தற்பயத்தவாகு மதுபோல நின்மார்
பைநினைந்து தன் வயவுநோய் தீரும் இவளும் எ-று. ‘புளிங்காய்
வேட்கைத்து? என்பது நின்மார்பு தான் இவளை நயவாதாயினும்
இவள் தானே நின் மார்பை நயந்து பயன் பெற்றாள் போலச்
சுவைகொண்டு சிறிது வேட்கை தணிதற்பயத்தளாகும் புளியங்
காய் நினைய வாய் நீரூறுமாறுபோல? என்று பொருளை விளக்கினர்
பேராசிரியர் ; தொல். உவம. 25, (பி-ம்.) 1 ‘வயாவு மூர; 2‘மார்பிவண்? ( 1 )