எ-து தலைமகன் மனைவயிற்போகக் கருதினானென்பது சொல்லிய
தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது.
குறிப்பு. உணர்ந்தோரை அறியலன். மேனி-நிறம்; ?நீல
மேனி நெடியோன் கோயிலும்? (சிலப். 5:172, அடியாா்.) தளிர்
மேனிக்கு உவமை: ?துளிதலைத் தலைஇய தளிரன் னோளே? (குறுந்.
222:7); ?தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி? (தொல். உவம.
16, பேர். மேற்.). ஒள்ளிய தொடிகளை அணிந்த முன்கையையுடைய
யாம். தளிர் மேனியும் தொடிமுன் கையும்: ?கோலமை குறுந்
தொடித் தளிரன் னோளே? (குறுந். 356:8). பிரிந்து-பிரிதலால்;
எச்சத் திரிபு, பிரிதலால் அறியலன். ( 8 )