39

(4) தோழிக்குரைத்த பத்து


39. அம்ம வாழி தோழி யூரன்
   வெம்முலை யடைய முயங்கி நம்வயின்
   1திருந்திழைப் பணைத்தோண் ஞெகிழப்
   பிரிந்தன னாயினும் பிரியலன் மன்னே.

  எ-து ஒருஞான்று தலைவன் தன்மனைக்கட் சென்றதுகொண்டு
அவன் பெண்மை நலமெல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தா
னென்பது தலைவி கூறினாளெனக் 2கேட்ட பரத்தை அவட்குப் பாங்
காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. வெம்முலை-விருப்பத்தைத் தரும் முலை. அடைய
முயங்கி-முற்றக் கலந்து. நம்வயின்-நம்மிடத்திலிருந்தும். பிரிவால்-
தோள் ஞெகிழ்தல்: குறுந் 87:5, 210:5. புறத்துப் பிரிந்தனன்.
போல் தோற்றினனாயினும் உள்ளத்தால் பிரிந் தில னாதலின், ‘பிரிந்
தனனாயினும் பிரியலன்? என்றாள்: ?என், நெஞ்சிற் பிரிந்ததூஉ
மிலரே? (தொல். களவு. 20. ந. மேற்.)

 (பி-ம்) 1 ‘திருந்திழை பணைத்தோள்? 2‘கேட்டு அப்பரத்தை?             ( 9 )