எ-து புறத்தொழுக்கம் உளதாகியதறிந்து தலைமகள் மெலிந்
துழி, ‘அஃதில்லை? என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
(ப-ரை.) ‘தேம்ப? என்றது தேம்பாநிற்க எ-று ‘பகல்கொள்
விளக்கோடு ....... அன்ன? என்றது ஒருநாளும் மெலிவறியாத இவள்
மெலிவறிய ஒழுகினாய் எ-று.
குறிப்பு. பகல்-ஒளி. விளக்கோடு - விளக்கால், ஆமூர் - சோழ
நாட்டின் மேல்பாலுள்ள ஒரூர்; நலம் - அழகு. தேம்ப - அழகுகெட.
எவன் பயம் செய்யும் - என்ன பயனை அளிக்கும்?.
(மேற்.). அடி, 2, வினைத் தொகைக்கு உதாரணம். (தொல். எச்ச.
20, ந.). மு. சூள் நயந்திறத்தால் சோர்வுகண்டு அழியுமிடத்துத்
தோழிக்குக் கூற்று நிகழும் என்பதற்கு இச்செய்யுள் உதாரணமாய
தன்றி இதனுள் இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றியசொல்லெனவே
சோர்வு கண்டழிந்தாளென்பதுணர்ந்தும் இப்பொய்ச்சூள் நினக்கு
என்ன பயனைத்தருமெனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு
காண்கவென்று பொருளும் விளக்கப்பட்டது ; தொல். கற்பு. 9, ந.
(பி-ம்.) 1‘பகல்கொல்? 2‘டிராநன் றறியா? 3‘வென்வேற்சோழனான்மூர்? ( 6 )