77
(8) புனலாட்டுப் பத்து

 


77. அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
   பேரூ ரலரெழ நீரலைக் கலங்கி
   நின்னொடு தண்புன லாடுதும்
   எம்மொடு சென்மோ செல்லனின் மனையேன்.

 எ-து முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினா னெனக்
கேட்டு இவனுடன் இனி ஆடேனென உட்கொண்ட பரத்தை,
‘புதுப்புனல் ஆடப் போது’ என்ற தலைமகற்குச் சொல்லியது.

  குறிப்பு. நினக்கு மொழிவல், நீர் அலைக்கலங்கி-நீரலைத்தலால்
கலங்கி, நெடுநல், 6. . ஆடுதும்-ஆடுவோம். சென்மோ-வருவா
யாக; மோ : முன்னிலையசை. செல்லல்-செல்லாதே. நின் மனை
செல்லல், எம்மொடு சென்மோ, புனலாடுதும்.               ( 7 )