எ-து தோழி முதலாயினோர் தலைமகன் கொடுமைகூறி விலக்
கவும் தலைமகள் வாயில் நேர்ந்துழி அவன் உவந்து சொல்லியது.
(ப-ரை.) முயிறு மூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை
மயக்கு மென்றது யான்செய்த கொடுமையையும் அவர்கள் தன்மேற்
காதலித்துக் கூறியவற்றையும் சிதைத்து என்பக்கலே நின்றா
ளென்பதாம்.
குறிப்பு. முயிறு மூசு குடம்பை-முயிறு என்ற எறும்பு மொய்த்து
உறைகின்ற கூட்டை; பழனப்..........குடம்பை : நற். 180 : 1. கழனி-
பழனம். கதிர்-நெற்கதிர். நோய்க்கு மருந்து. ஐங். 101 : 5. பணைத்
தோளோள் - பெருத்த தோளையுடையவள். இவள் தோளோள்.
(பி-ம்.) 1 ‘பழனப் பாகர்? ( 9 )