எ-து இற்செறிவித்தவிடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு
கண்டு, ‘இது தெய்வத்தினான் ஆயிற்று’ என்று தமர் வெறியெடுப்
புழி அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு
நின்றது.
குறிப்பு. உ.ண் துறை அணங்கு-நீருண்ணும் துறையிலுள்ள
தெய்வம். நீர்த்துறையில் அணங்குளதாதல்: ஐங். 53:1; முருகு.
224; அகநா. 156:15, 240:8. உறை நோய்-இவள் வேறொரு
செயலுமின்றி உறைதற்குக் காரணமாகிய நோய். இவளுறைநோய்க்
குக் காரணம் அணங்காயின் என்க. வரிக்கும்-கோலம் செய்யும்.
களவன் வரித்தல்: குறுந். 351:2-3. தொடி- ஒருவகை வளை; தோள்
மெலிதலால் தொடி நெகிழ்ந்தது (ஐங். 27:3; “தொடி நெகிழ்ந்
தனவே தோள்சா யினவே” (குறுந். 239:1). பசப்ப-பசலைநிறம்
கொள்ள. தோள் பசத்தல்: ஐங். 452:4-5, 459:1; “தாம்பசந்
தனவென்றடமென் றோளே” (குறுந். 121:6); “பீர்நீர்மை கொண்டன
தோள்” (ஐந். ஐம்.2)
வெறி-வெறியாடல்; தெய்வ பூசை, அறத்தொடு நிற்றல்-களவு
வெளிப்படுத்தி நிற்றல். ( 8 )