எ-து தலைமகன் ஆற்றாமைகண்டு கையுறையேற்ற தோழி
தலைமகள் தழையேற்க வேண்டிக் கூறியது.
குறிப்பு. நூற்றன்ன-நூற்றாற் போன்ற. வயலைக் கொடிக்கு
நூற்ற உழுத்தமா உவமை. செயலை -அசோகமரம். பகைத்தழை :
ஐங். 187 : 3, குறிப்பு. அன்னாய் என்றது தலைவியை.
(மேற்). மு. தலைவன் மாட்டுத் தோழி குறைநயப்பிக்கச் சென்ற
வழித் தோழி செல்லும் குறிப்புமொழிக்கு அவள் மறைந்து அரிய
ளாகத் தன்னொடும் அவளொடும் குறிப்பினை முன்னர்த் தடுத்துக்
கொண்டு வழிபட்டு முயலும் பலவேறு பக்கத்தின் கண் தோழி
கூற்று நிகழும் (தொல். களவு. 24, இளம்.) ; பாங்கி கையுறை புகழ்
தல் : நம்பி. களவு. 31.
(பி-ம்.) 1 ‘உழுந்துதூற் றன்ன? ( 1 )
(21) அன்னாய் வாழிப்பத்து முற்றிற்று