368

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


368. எரிப்பூ விலவத் 1தூழ்கழி பன்மலர்
    பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்
    தண்பத வேனி லின்ப நுகர்ச்சி
    எம்மொடு கொண்மோ பெருமநின்
    அம்மெ லோதி யழிவில 2ளெனினே.

     எ-து ‘வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டுநுகர வருவல்’
என்று பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது.

   (ப-ரை) ‘அம்மெலோதி அழிவிலளெனின் இன்பநுகர்ச்சி எம்
மொடு கொண்மோ’ என்றது நீ வருந்துணையும் இவள் ஆற்றியுள
ளாயின், எம்மொடு நுகர்ச்சி கொள்வீராமினென மறுத்தவாறு.

   குறிப்பு. எரிப்பூ இலவம்-நெருப்புப் போன்ற பூவையுடைய
இலவமரம்; கலித.் 33 : 10: 245 : 14-5. ஊழ்கழி பன்மலர்-
மலர்ந்து காம்பினின்றும் நீங்கின பல பூ. புன்கின்மலருக்குப் பொரி
உவமை; ஐங். 347 : 3, குறிப்பு. புகர் நிழல் வரிக்கும்-புள்ளியான
நிழலிற் கோலஞ்செய்யும். கொண்மோ - கொள்வாயாக. அம் மெல்
லோதி-அழகிய மென்மையான கூந்தலையுடைய தலைவி. அழிவில
ளெனின் நுகர்ச்சி கொண்மோ.

  (பி-ம்) 1`தூழ்கழி ' 2`ளெனினே.'