எ-து பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவக்
கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது.
குறிப்பு. நல்லோராங்கண்-நல்லோரிடத்தே. பல்லூழ்-பலமுறை
மறுகி-அறிவு சுழன்று. வினவுவோயே : செவிலியை நோக்கியவிளி,
வல்லில் : ஐங். 373 : 5, குறிப்பு. கண்டனெம்-பார்த்தோம். வினவு
வோயே. யாம் சுரத்திடைக் காளையொடு கண்டனெம்.
(பி-ம்.) 1 ‘நல்லோரங்கட் பரிந்து’ 2‘மறுகின்’ ( 10 )
(39) உடன்போக்கின்கண் இடைச்சுரத்
துரைத்த பத்து முற்றிற்று.