எ-து இற்செறிப்பாரெனக் கேட்ட தலைமகள் வரையாது வந்
தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. அம்ம வாழிதோழி : ஐங். 31, குறிப்பு, கழி-உப்பங்கழி.
நாண் இரை-தூண்டில் நாணில் இரையை, கொளீஇ - பொருந்தச்
செய்து. சினைக்கயல்-சினையையுடைய மீன்களை. பாணன் மீன்
பிடித்தல் : குறுந். 169 : 4 பிரிந்தும் வாழ்துமோ-பிரிந்திருந்தும் உயி
ருடன் வாழ்வோமோ? அதினும் உயிர் நீங்குதல் நலம் என்றபடி :
நற். 129 : 1-2 ; குறுந். 32 : 6. 57 : 3-4; கலித் 2 : 13; அகநா,
339-11-4. முயறல் ஆற்றாதேம்-முயலாதேம். ஆற்றாதேம் நாம்
பிரிந்தும் வாழ்துமோ, பாணன் நாணிரை கொளீஇக் கயல்மாய்க்கும்
என்றது தலைவன் களவுப் புணர்ச்சியில் தான் மிக்க மகிழ்ச்சி
கொண்டு வரையாது நம்மைத் துன்புறுத்துகிறான் என்றபடி.
(பி-ம்.) 1 ‘னாளிரைக்? ( 1 )