எ-து வாயிலாய்ப் புகுந்த பாணன், தலைமகள் தோள்மெலிவு
கண்டு ‘மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு 2வேறு
படுதல் தகாது’ என்றாற்கு அவள் சொல்லியது.
குறிப்பு. ஆனாது-அமையாது. மெல்லம் புலம்பன் : ஐங்.
120 : 4, குறிப்பு. பிரிந்தென-பிரிய. புல்லென்றன-பொலிவழிந்தன.
புரிவளைத்தோள்-முறுக்குண்ட சங்குகளாலான வளையையுடைய
தோள். தோள் புல்லென்று தோள் பொலிவழிதல் : ஐங். 39 : 3,
குறிப்பு.
மனைப்புறத்துத் தலைவன் போய் வந்த துணையானே.
(மேற்.) மு, இது நெய்தற்கண் மருதம்; தலைவன் புறத்துப்போன
அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி
கூறியது (தொல். அகத். 12, ந.)
(பி-ம்.) 1 ‘வெம்புரிவளைத்’ 2 ‘வேறுபடுதற்காகாது’ ( 3 )