137


(14) பாணற்குரைத்த பத்து


137. நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
   திண்டேர்க் கொண்கனை நயந்தோர்
   பண்டைத் தந்நலம் பெறுபவோ மற்றே.

  எ-து தலைமகன் வாயில்பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும்
அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்
தாளாக, ‘இனி இந்த வேறுபாடு என்?? என்று வினவிய பாணற்கு
அவள் சொல்லியது.
  (ப-ரை.) திண்டேர்க் கொண்கனை நயந்தோர் நும்மூரிற்பண்
டைத் தம் நலம் பெறுவார் உளரோவெனக்கூட்டுக.
  குறிப்பு. நின்னை ஒன்று வினவுவல், நயந்தோர்-விரும்பின
மகளிர். பண்டைத் தம் நலம்-பழைய தமது அழகை. பெறு
பவோ-பெறுவரோ; இல்லை என்றபடி.
   இனி - தலைவன் வந்து சென்றபின்பு. ( 7 )