எ-து தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த
தோழி, ‘அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து
ஆற்றாயாகின்றது என்னை?? என்றாட்கு ‘அவன் கொடியனே
யாயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை
யுடைத்து, ஆதலாற்காண்? எனச்சொல்லியது.
(ப-ரை.) நீண்ட பூவினையுடைய வேழம் தீண்டுதலான் வடிக்
கொண்மாத்து வண்டளிர் நுடங்குமென்றது பரத்தையரால் தமக்கு
உளவாகிய மெலிவு கூறியவாறு.
குறிப்பு. கொடி-ஒழுங்கு; ?கொடிக்கரும்பு? (சீவக. 1184); நீட்
சியுமாம்; ?ஒழுகுபொற்கொடிமூக்கு? (சீவக. 165). தீண்டி-தீண்ட;
எச்சத்திரிபு . அயல-பக்கத்திலுள்ள. வடி-பிஞ்சு. மாஅத்து வண்
தளிர்-மாமரத்தினது வளவிய தளிர். பனித்துயில்-குளிர்ச்சியை
யுடைய துயில். இன்சாயற்று-இனிய மென்மையையுடையது. தலை
வனது மார்பு துயிலுவதற்கு இனிய சாயலை உடையது என்றபடி;
ஐங். 4 : 5-6; குறுங், 68 : 4; அகநா. 328 : 15. தலைவி தலைவன்
மார்பில் துஞ்சுதல்; ஐங். 205 : 4-5; நற். 20 : 2, 171 : 11.
(மேற்.) மு. தோழியிடத்துத் தலைவி தலைவனை உவந்து கூறியது
(தொல். கற்பு. 6, ந.)
(பி.-ம்.) 1‘வடுக்கொண்? 2‘பணித்துயில்? ( 4 )