எ-து பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய
தலைமகள் அவற்குத் தன் மெலிவுகாட்டிச் சொல்லியது.
குறிப்பு. உரைத்தற்கு-தலைவனிடம் கூறுதற்கு, பிரிந்தென-
பிரிய இறைகேழ்-முன்கையிற் பொருந்திய. பாண, வளை நீங்கிய
நிலையைக் காண்மதி.
(மேற்.) மு. தலைவி தூதுவிடக் கூறியதற்குச் செய்யுள் (தொல்.
அகத். 45, இளம்.) தலைவன் பரத்தையிற் பிரிந்துழி அவன் நின்
வார்த்தையே கேட்பன் என்பது தோன்றப் பாணற்குத் தலைவி
கூறியது (தொல். கற்பு, 6, ந.) ‘இப்பத்தும் நெய்தற்கண் மருதம்?
(தொல். அகத். 12, ந.)
(பி-ம்.) 1 ‘யுரைத்தற்கு முரியை? ( 10 )
(14) பாணற்குரைத்த பத்து முற்றிற்று.