எ-து வாயில்வேண்டிய தோழிக்குத் தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது.
(ப-ரை.) இதன் உள்ளுறை : பரத்தையொருத்தியோடு ஒழுகு
கின்ற ஒழுக்கம் இடையற்றதாகச் சென்றவாயில்கள் நெருங்க
அவள் நெஞ்சு நெகிழ்ந்து கூறிய காதல் மாற்றம் பரந்து செல்கின்ற
துறைவனென்பதாம். வெள்ளாங்குருகென்றது பரத்தையாகவும்
பிள்ளையென்றது பரத்தையோடு தலைமகனிடை உளதாகிய ஒழுக்க
மாகவும், காணிய சென்ற மடைநடை நாரையென்றது வாயில்களா
கவும் கொள்க. இவை வருகின்ற பாட்டு ஒன்பதுக்கும் ஒக்கும்.
மிதித்தது. அவளை நெருங்குதலாகவும், நக்க நெய்தல் அவள் நெஞ்
சாகவும், கட்கமழ்ந்து ஆனாமை அவள் அவர்க்குக் கூறிய மாற்றம்
எல்லாருக்கும் புலப்படுதலாகவும் இப்பாட்டிற்குக் கொள்க.
குறிப்பு. வெள்ளாங்குருகின் பிள்ளை-வெள்ளாங்குருகு என்ற
பறவையினது குஞ்சு, செத்தென-இறக்க. காணிய சென்ற-அதைக்
கண்டுவிசாரிக்கச் சென்ற. மிதிப்ப-மிதித்தலாலே. நக்க-மலர்ந்த.
கண்போல் நெய்தல்; ஐங். 181 : 1, 188 : 3-4; குறுந் 9 : 4-6, கள்-
தேன், ஆனா-அமையாத. நெக்க-நெகிழ்ந்த, நேர்கல்லேன்-உடன்
படேன்; நெஞ்சம் நேர்தல் : குறுந். 49 : 5.
(மேற்,) மு. வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில்
மறுத்தது; திணைமயக்குறுதலுள் இப்பத்தும் (151:60) நெய்தற்கண்
மருதம் (தொல். அகத். 12, ந,) ( 1 )