எ-து 3பலவழியானும் வாயில்நேராளாகிய தலைமகள், ‘மகப்
பேற்றிற்கு உரித்தாகிய காலங்கழிய ஒழுகுகின்றாய்? என நெருங்கிய
தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘பதைப்ப...............துறைவன்? என்றது வாயில்கள்
கூறப்பரத்தையெய்திய 4இரக்கத்தினைத் தன் தண்ணளியால்
தீர்ப்பான் எ-று.
குறிப்பு. பதைப்ப-அசைய; ஐங். 156 : 3, ததைதல்-நெருங்கு
தல். ஓதமொடு-நீரோடு. பைஞ்சாய்ப் பாவை-தண்டாங் கோரை
யைக் கிழித்துச் செய்த பாவை ; ஐங். 383 : 5; ?பௌவநீர்ச் சாய்க்
கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ? (கலித். 76 : 7, ந,). ஈன்ற
னென்-பெற்றேன். யான் ஈன்றனன்.
(மேற்.) மு. பல்லாற்றானும் வாயில்நேராத தலைவியை மகப்
பேற்றிற்கு உரிய காலங்கழிய ஒழுகாநின்றாய் என நெருங்கிய
தோழிக்கு யான் களவின்கண் மகப் பெற்றேனெனக் காய்ந்து
கூறியது. (தொல். கற்பு. 6, ந.)
(பி-ம்.) 1 ‘பறைப்பத்? 2 ‘பஞ்சாய்க் கோதை? 3 ‘பலபடியானும்?
4 ‘விரகத்தினை? ( 5 )