157


(16) வெள்ளாங்குருகுப் பத்து


157. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
   காணிய சென்ற மடநடை நாரை
   காலை யிருந்து மாலைச் சேக்கும்
   தெண்கடற் சேர்ப்பனொடு வாரான்
   தான்வந் தனனெங் காத லோனே.

  எ-து பரத்தையிற்பிரிந்து வாயில் வேண்டி ஒழுகுகின்ற தலை
மகன் புதல்வன் வாயிலாக வருமெனக்கேட்டு அஞ்சிய தலைமகள்
புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது.

  (ப-ரை.) ‘காதலன்? என்றது என்மேல் என்புதல்வன் காதலன்
என்பதறிந்தேன்; அவனோடு வாராது தனித்துவருதலான் எ-று.
‘நாரை காலையிருந்து மாலைச்சேக்கும் துறைவன்? என்றது பரத்தை
யிடத்துவிட்ட வாயில்கள் செவ்விபெறாது பகலெல்லாமிருந்து
இரவின் கண்ணும் அங்கே துயில்கின்றாரென்பதாம்.

  குறிப்பு. மாலைச் சேக்கும்-மாலை நேரத்திலும் தங்குகின்ற.
சேர்ப்பன் : நெய்தல் நிலத்தலைவன். எம் என்றது தலைவி. காதலோன்
புதல்வன். காதலன் சேர்ப்பனொடு வாராமல் தானாகவே தனிமை
யன் வந்தனன்; இனிப்புதல்வன் வாயிலாகத் தலைவன் வரவியலாது
என மகிழ்ந்தபடி

  .(மேற்.) மு. வாயில் வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயி
லாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித்
தனித்து வந்துழிக் கூறியது (தொல். கற்பு. 6, .)    ( 7 )