எ-து தலைமகளை வாயில் நேர்வித்தற்பொருட்டாக, ‘காதலர்
கொடுமை செய்தாராயினும் அவர் திறம் மறவாதொழியல் வேண்
டும்? என்று முகம் புகுகின்ற தோழிக்கு, ‘என கைவளை நில்லாதா
கின்றது அவரை நினைந்ததன் பயனன்றே; இனி அமையும்? எனத்
தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) தாமரைப் பூவகத்துளதாகிய தும்பிச் சினையை வேழம்
சீக்கும் என்றதுதன்மாட்டு என்புதல்வன் உறைதலையும் விலக்குவா
ராகிய பொதுமகளிரையுடையான் எ-று.
‘சினைச்சேக்கும்? என்று பாடமோதுவார் தும்பிச்சினை வருந்த
வேழம் தங்குமென்று பொருளுரைப்ப.
குறிப்பு. அறுசில் கால-ஆறு சிறிய கால்களையுடைய.
அஞ்சிறை-உள்ளிடத்தே சிறகையுடைய, தும்பி-ஒருவகை வண்டு;
இது வண்டினுள் உயர்ந்த சாதி; சீவக. 892, ந. அஞ்சிறைத் தும்பி;
முருகு. 78; குறுந். 2: 1 ; கலித். 46 2. நுாற்றிதழ்த் தாமரைப்பூ-நுாறு
மடல்களையுடைய தாமரை மலர்; ?சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்
கேழ்,. நுாற்றிதழ் அலர்? (புறநா. 27). சினை-முட்டைகளை. பூவிலுள்ள
தும்பிச்சினையைச் சீக்கும்; சீக்கும்-துடைக்கின்ற. காம்பு கண்டன்ன-
முங்கிலைக் கண்டாற்போன்ற. துாம்பு-உட்டுளை, நணி-அணிமை.
இறையேர் எல்வளை-முன்கையிற் பொருந்திய ஒளியையுடைய
வளைகள்; இறை: ஆகுபெயர்; நற் 167 : 10. நெகிழ்பு ஓடும்-
நெகிழ்ந்து ஓடா நிற்கும். ஓடும்மே : விரிக்கும் வழி விரித்தல். தலைவனை
உள்ளி இறைவனை நெகிழ்ந்தோடல்: ஐங், 27 : 3, 54 : 3, 136 : 2;
140 : 3; நற். 236 : 7 குறுந் 289; கலித். 3, 121, 125, 127, 132,
குறள் 1157; கைந்நிலை, 55.
முகம்புகுதல்: நோக்கிற்கு எதிர்சென்று புகுதல்: நாலடி. 303
(பி-ம்.) 1‘துறைநனி? 2‘நிறையே போல்வளை?, ‘நிரைபோ
லெல்வளை. ( 10 )
( 2 ) வேழப்பத்து முற்றிற்று.