எ-து வரைவுநீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்
புறத்தானாகத் தோழி கூறியது.
(ப-ரை.) புலியேற்றை பிடியீன்ற குழவியைக் கொள்ளவேண்டிக்
காலம் பார்த்து மறைந்திருக்கும் நாடனென்றது தன்வஞ்சனையாலே
நின் பெண்மையை வௌவுகின்றானென்பதாம்.
குறிப்பு. குறுங்கை இரும்புலி கோள்வல் ஏற்றை-குறிய கையை
யுடைய கொல்லுதல்வல்ல பெரிய ஆண் புலி; ஐங். 226 : 2; நற்.
36 : 1; குறுந். 141 : 5. நெடும்புதல் கானத்து-பெரிய புதர்களுடைய
காட்டில், மடப்பிடி-மடமை பொருந்திய பெண்யானை. குழவி-யானைக்
குட்டியை. கொளீஇய-கொள்ளுதற்கு. தூங்கும்-தொங்குகின்ற. நிழலில்
ஒளிக்கின்ற. கொய்திடு தளிரின்-கொய்யப்பட்ட தளிரைப் போல.
மெய்-உடல் பிறிதாதல்-மெலிந்து பசலைத்தாதல். எவன் கொல்
அன்னாய்; ஐங்.217 : 4, 219 : 4; குறுந். 150 : 5.
(மேற்) அடி, 1. ஏற்றை யென்னும் சொல் ஆற்றலொடு கூடிய
ஆண்பாற்கெல்லாம் உரித்து (தொல். மரபு. 49, பேர்.). மு. தலைவ
னது அன்பு சிதைவுடைத்தாயின் தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்
(தொல். களவு. 224, இளம்.) (பி-ம்.) 1 ‘லொலிக்கு நாடு?. ( 6 )