எ-து தலைமகன் 2வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அது
கேட்டு, ‘இஃது என்னாங்கொல்?? என்று ஆற்றாளாகிய தலைமகட்குத்
தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, ‘கடிதின் வந்து வரைவான்?
எனச் சொல்லியது.
(ப-ரை.) தன்னாற் கொள்ளப்பட்ட களிறு தப்பினதற்குப் புலி
கதம் சிறந்து குழுமுமென்றது நினைத்தனவற்றிற்குக் குறை வரின்
அதற்கு வெகுண்டு முடிப்பான் எ-று
குறிப்பு. நுண் ஏர் புருவத்த-நுண்ணிய அழகிய புருவத்தை
யுடைய. கண்ணும் என்றது இடக்கண்ணை. ஆடும்-துடிக்கும்.
பெண்டிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்தம். செறூஉம்-
நெகிழ்ச்சி நீங்கி நெருங்கும்; குறுந். 260 : 3, கோள் பிழைத்த-
தனது பிடியினின்றும் தப்பியதால் உண்டான. கதம் சிறந்து-கோபம்
மிகுந்து. மழையின் குழுமும்-மேகத்தைப்போல ஒலிக்கும், புலி
குழுமுதல் : ஐங், 274 : 2; குறுந். 321 : 6. கொல் : அசைநிலை,
தலைவன் வருதற்குரிய நன்னிமித்தங்கள் : குறுந். 260 : 1-4.
(மேற்)) மு. தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி
தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு கடிதின் வரைவ
ரெனக் கூறியது (தொல். களவு. 23, ந.).
(பி-ம்.) 1 ‘செற்றும்? 2 ‘வரைவு வேண்டியவிடத்துத் தமர்? ( 8 )