எ-து களவினிற் புணர்ந்து பின்பு வரைந்துகொண்டு ஒழுகா
நின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகிய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) ‘நல்ல...... அன்னாய்? என்றது இக்காலத்து இங்ஙனம்
ஒழுகுகின்றான் அக்காலத்து அங்ஙனங்கூறிய தென்கொல் எ-று.
சேறாடிய கள்வன் முள்ளிவேரளைச் செல்லுமென்றது பிறர் கூறும்
அலர் அஞ்சாது பரத்தையர் மனைக்கட் செல்வானென்பதாம்.
குறிப்பு. அள்ளல்-சேற்றின்கண். ஆடிய-விளையாடிய. அளை-
வளை. முள்ளிவேரளை: ஐங். 23. நீயேன்-விட்டு நீங்கேன்; ?நீயா
நினைவ? (பரி. 3:84); ‘நீயாதும் அகலாது முறைதல்? (இறை. 43,
உரை) . என்றது-என்று களவொழுக்கத்திற் சூளுரைத்தது. எவன்
கொல்-என்ன ஆயிற்று? ( 2)