23

 

(3) 1களவன் பத்து

 


23.முள்ளி வேரளைக் களவ னாட்டிப்
பூக்குற் றெய்திய புனலணி யூரன்
தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங் காவ தெவன்கொ லன்னாய்.

இதுவுமது.

(ப-ரை.) தன்னூர் விளையாட்டுமகளிர் அலையின்கண் வாழும்
அலவனை அலைத்துப் பூக் குற்று விளையாடினாற்போலத் தன் மனைக்
கண் வாழும் நம்மை வருத்திப் புறத்துப்போய் இன்பம் நுகர்வான்
எ-று.

குறிப்பு. களவன் ஆட்டி-நண்டை அலைத்து விளையாடி;
இஃது இளமகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று; “இலங்குவளை
தெளிர்ப்ப வலவனாட்டி” (ஐங். 197); பட். 101; “அலவ
னாட்டுவோள்” (நற். 363:10); குறுந் 303:7. பூக்குற்று-மலர்களைப்
பறித்து; “சுனைப்பூக் குற்று” (நற். 173:1); குறுந். 142:1. ஆட்டு
தலும் குறுதலும் மகளிர் தொழில். தேற்றம் செய்து-தெளிவித்து.
நப்புணர்ந்து-நம்மைக்கலந்து; நம்: தனித் தன்மைப் பன்மை; நம்
புணர்ந்து என மெல்லெழுத்துப் பெறுதற்குரியது வல்லெழுத்துப்
பெற்றது; தொல். தொகை. 15, ந.; நற். 165: 7; அகநா. 311: 5.
இனி-இப்பொழுது; புறநா 243: 1; “இனியறிந்தேன்” (குறள், 1083),
தாக்கணங்கு-தீண்டி வருத்தும் தெய்வம்; குறள், 1082. ( 3 )