எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய்
நின்றுழி அவன் கேட்குமாற்றால் வெறி நிகழா நின்றமை தோழி தலை
மகட்குச் சொல்லியது.
(ப-ரை.) பயிர் விளைப்பார் விலங்குகள் நலியாமைக்குக் கழலைக்
கண்ணாக உறுத்திப் பொய்ம்மைவகையாற் பண்ணிவைத்த பெண்
பாற் புலியைப் புணர்ந்து புலிப்போத்துப் படப்பை நடுவே துயரந்தீரு
மென்றது வரைந்துகொள நினையாது இக்களவிற் புணர்கின்ற மாயப்
புணர்ச்சியானே இன்பம் முடிய நுகர்கின்றானென்பதாம்.
குறிப்பு. வெறிசெறித்தனன்-வெறியாட்டத்திற்கு நெருக்கினன்.
கறிய-மிளகு கொடிகளையுடைய. கன்முகை-மலைக் குகையிலுள்ள.
வயப்புலி-வலியுள்ள புலி. கழங்கு மெய்ப்படூஉ-கழற்சிக்காயைக்
கண்ணாக வைத்து. மெய்ம்மை யன்ன-உண்மையான பெண்புலி
யைப்போலத் தோன்றுகின்ற. மன்றில்-தோட்டத்தின் நடு ; ஐங்.
எழு. 4, பையுள்-துயரம். உறீஇய-பொருந்திய. நோய்க்கு வேலன்
வெறி செறித்தனன். ( 6 )