298

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


298. மழை 1வர வறியா மஞ்ஞை யாலும்
   அடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி
   தானெம் மருளா னாயினும்
   2யாந்தன் னுள்ளுபு மறந்3தறி யேமே.

    எ-து தலைமகற்குத் குறைநேர்ந்த தோழி தலைமகட்குணர்த்திய
வழி அவள் நாணத்தினால் மறைத்தொழுகியவதனைத் கூறக்கேட்ட
தலைமகன் சொல்லியது.

   (ப-ரை.) மழையினது வரவையறிந்து மஞ்ஞை ஆலுமென்றது
யான் நின்னிடத்துவருகின்ற வரவினையறிந்து இதற்கு அவள்
மகிழா நிற்கும்; நீ கூறுகின்றது பொய்யென்பதாம்.

  குறிப்பு. மழை வரவு அறியா-மழையின் வரவை அறிந்து.
அசைநடைக் கொடிச்சி; ஐங். 299; 3. எம்மை அருள் செய்யாளா
யி
னும், உள்ளுபு மறந்தறியேம்-நினைத்துப் பிறகு மறந்தறியேம்.

  (மேற்) மு. இது குறி பிழைத்தவழித் தலைவன் தோழிக்குச்
சொல்லியது. (தொல். களவு. 17, இளம்.) இஃது இரவுக்குறியில்
தலைவன் பரிவுற்றது (தொல். களவு, 43) ; இ. வி. 519.

   (பி-ம்.) 1 ‘வரலறியா? 2 ‘யான்றதுள்ளுபு? 3 ‘தறியேனே? ( 8 )