எ-து முன்னொருநாள் தன்னோடு புதுப்புனலாடுழி, ‘இனிப்புறத்
தொழுக்கம் விரும்பேன்? என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன்
பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது
கேட்ட தலைமகள் அவனுழையர் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. அம்ம வாழி தோழி-தோழி ஒன்றுசொல்லுவேன் கேட்
பாயாக; ஐங். 31-40. இத்தொடர் சங்க நூல்களிற் பலவிடங்களிற்
பயின்று வரும்; அம்ம: கேட்பிக்கும் கிளவி; வாழி: அசை, கடன்-
கடப்பாடு. என்னுங் கொல்லோ- என்பானே? முடம்-வளைவு;
பொருந. 189. பொருந்துறை-பெரிய நீர்த்துறையின்கண். பெருந்
துறை மருது: ஐங். 7:4, குறிப்பு. உடன்-கூட. சூள்-சத்தியம்.
மகிழ்நன் உள்ள சூள் கடனன்று என்னுங் கொல்லோ?
உழையர்-பக்கத்திலுள்ளார்.
(மேற்) அம்ம என்ற சொல் கேட்பித்தற் பொருளில் வரும்:
தொல். இடை. 29, இளம் சே. ந. நன். 437-8, மயிலை., விருத்தி ;
இ.வி, 274. ( 1 )