குறிப்பு. புழைக்கால் ஆம்பல்-உள்ளே துளை பொருந்திய
தண்டினையுடைய ஆம்பற்பூ ; நீர்வள ராம்பற் றூம்புடைத் திரள்கால்?
(நற். 6:1); ? தூம்புடைத் திரள்கால், ஆம்பல் ? (குறுந். 178:2-3)
ஆம்பல்தாதின் நிறம் பசலைக்கு உவமை; ஏர்-உவமஉருபு. வண்ணம்-
நிறம். ஏதிலாளர் என்றது தலைவனை; இது புலந்து கூறியது. என்
கண்கள் வண்ணத்தைக் கொண்டன.
(பி-ம்.) 1 ‘வண்ணங்கொண்ட? 2 ‘ஏதிலார்க்கு? ( 4 )