36

(4) தோழிக்குரைத்த பத்து


36. அம்ம வாழி தோழி யூரன்
   நம்மறந் தமைகுவ னாயி னாமறந்
   துள்ளா தமைதலு மமைகுவ மன்னே
   கயலெனத் கருதிய வுண்கண்
   பயலைக் கொல்கா வாகுதல் பெறினே

  எ-து தான் வாயினேருங் குறிப்பினளானமை யறியாது தோழி
வாயில் மறுத்துழி அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள்
சொல்லியது.

  குறிப்பு. நம் மறந்து-நம்மை மறந்து. அமைகுவனாயின்-
பரத்தையரிடத்துப் பொருந்துவானாயின். உள்ளாது-நினையாமல்
அமைதலும் அமைகுவம்-அமைதலும் செய்வேம். கயலெனக்
கருதிய உண்கண் என்பது பட்டாங்கு கிளந்தது; உண்கண்-
மையுண்ட கண். ஒல்காவாகுதல்-தளராதிருத்தலை. பெறின்
அமைகுவம். கண் பசத்தல்: ஐங். 34:4, 37:2; குறுந். 13:5.            ( 6 )